என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுவன் கொலை"
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகள்களும் ஹரிஹர தீபன் (6) என்ற மகனும் உள்ளனர்.
ஹரிஹரதீபன் தனியார் பள்ளியின் 2-ம் வகுப்பு படித்து வந்தான். வித்யா 100 நாள் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய வித்யா தனது மகள்கள் மட்டும் இருந்ததைப் பார்த்து மகனை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
அடிக்கடி வித்யாவின் அக்கா மகன் ராஜேஷ்குமார், உறவினர் பிரியதர்ஷிணி ஆகியோர் வீடுகளுக்கு ஹரிஹரதீபன் விளையாடச் செல்வது வழக்கம் எனவே அவர்களது வீட்டுக்கு சென்று வித்யா தேடிப்பார்த்தார். அங்கும் அவனை காணவில்லை.
எதேச்சையாக பிரியதர்ஷிணியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஹரிஹர தீபன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான் இதை பார்த்ததும் அலறி துடித்த வித்யா அவனை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.
இதனையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 3 மகள்கள் இருந்தபோதும் ஆண் வாரிசுக்காக 4-வதாக ஹரிஹரதீபனை பெற்றெடுத்து ஆசையாக வளர்த்து வந்தனர். ராமகிருஷ்ணன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த போதிலும் வசதியாகவே இருந்து வந்துள்ளார். இவர்களது பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக உறவினர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
மேலும் ராமகிருஷ்ணன் வளர்ச்சியிலும் அவர்கள் பொறாமைபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது உறவினரான அஜய்குமார் (19) என்பவர்தான் கொலை செய்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. எனவே அவரிடம் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அஜய்குமார் தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த கொலை நரபலியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது உறவினர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தில் தான் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் பிற நாடுகளை காட்டிலும் அதிக அளவில் போதை பொருள் புழங்குகிறது. எனவே போதைப்பொருளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கடுமையான போக்கை கையாண்டு வருகிறார்.
அந்த வகையில் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கும் நபர்களை பார்த்த இடத்தில் சுட்டு கொல்லும் அதிகாரத்தை போலீசாருக்கு அவர் வழங்கி உள்ளார். அதன்படி 2016-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 5000 பேர் போலீசாரின் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார்.
ஆனால் இது முற்றிலும் மனித நேயமற்ற செயல் என்றும் அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்படும் போர் என்றும் மனித உரிமை அமைப்புகள் சாடின. அதிபர் ரோட்ரி கோ துதர்தே மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு போதை பொருள் விவகாரத்தில் கியான் டெலோஸ் சாண்டோஸ் என்கிற 17 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது அங்கு பெரிய அளவிலான போராட்டத்துக்கு வித்திட்டது.
அதன் எதிரொலியாக சிறுவனை சுட்டுக்கொன்ற 3 போலீசார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் 3 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். #PhilippinesPolice #StudentMurder #DrugsWar
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்ற, நாகராஜ், அவனை மிகவும் கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தாய் மஞ்சுளா, கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
கடந்த பிப்ரவரி மாதம் சிறுவன் கொலை செய்யப்பட்டபோதே மகன் ரித்தேஸ் கொலைக்கு பின்னர் மஞ்சுளா, நாகராஜனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சி வாழ்ந்துள்ளார். அதே நேரத்தில் மகனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் அவர் முடிவு செய்தார். கணவர் தன்னை விலக்கி வைத்து இருந்ததால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தனக்கு தெரிந்த நண்பர் பிரசாந்த், சுதாகர் ஆகியோருடன் இது பற்றி அவர் கூறினார்.
துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கவும் சம்மதித்தார். இதை தொடர்ந்து இருவரும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.
இந்த விவகாரம் சைதாப்பேட்டை போலீசுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.
சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னை சூளைமேடு ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவர் வசித்து வந்த பகுதியில் உள்ள வீடுகள் காலி செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து இவர் தனது குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்து சூளைமேடு நெடுஞ்சாலையில் நடைபாதையில் வசித்து வந்தார்.
பழைய புத்தகங்களை நடைபாதையில் போட்டு பெருமாள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (17). படிப்பை பாதியில் நிறுத்திய இவன் ஊர் சுற்றி வந்தான்.
இவன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று காணாமல் போனான். இது தொடர்பாக தந்தை பெருமாள் சூளைமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை தேடி வந்தனர். ஆனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனால் ராஜேஷ் வீட்டில் சொல்லாமல் வெளியூருக்கு எங்காவது சென்று தங்கி இருந்து வேலை செய்து வரலாம் என்று கருதப்பட்டது. இதனால் போலீசாரும் ராஜேஷ் காணாமல் போன விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியே விட்டுவிட்டனர்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி முன்பு நேற்று மாலை 2 சிறுவர்களும் பரத்குமார் என்ற 19 வயது இளைஞரும் ஆஜரானார்கள். சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த இவர்கள் 3 பேரும், காணாமல் போன ராஜேசை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி ஆணையாளர் முத்துவேல் பாண்டி சிறுவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார். அப்போது 3 பேரும் ராஜேசை கொலை செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் புதைத்தது தெரிய வந்தது. இது பற்றி அவர்கள் அளித்த திடுக்கிடும் வாக்கு மூலம் வருமாறு:-
ராஜேஷ் எப்போதும் எங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பான் இது எங்களுக்கு மிகவும் தொல்லையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி நாங்கள் 3 பேரும் நுங்கம்பாக்கம் சுடுகாட்டின் உள்ளே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு வந்த ராஜேஷ் எங்களிடம் கத்தியை காட்டி மிரட்டினான். பணம் தராவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி கத்தியாலும் குத்த வந்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ராஜேசை கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர் நுங்கம்பாக்கம் சுடுகாட்டிலேயே குழி தோண்டி ராஜேசின் உடலை புதைத்தோம். இவ்வாறு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
ராஜேஷ் கொலை செய்யப்பட்டு 6 மாதம் ஆகிறது. நுங்கம்பக்கம் சுடுகாட்டில் ராஜேசின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை 3 பேரும் அடையாளம் காட்டினர். அந்த இடத்தை தோண்டி ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கொலையுண்டு 6 மாதமாகி விட்டதால் ராஜேசின் உடல் எலும்புக் கூடாகி இருக்கும் என்பதால் சுடுகாட்டில் தோண்டி எடுத்தவுடன் அங்கு வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ராஜேசின் உடல் இன்று அல்லது நாளை தோண்டி எடுக்கப்பட உள்ளது.
ராஜேசை கொலை செய்து புதைத்தவர்களில் 2 சிறுவர்கள் சுடுகாட்டில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டு வெட்டியான் வேலை செய்கிறார்கள். இதனால் தான் அவர்களால் கச்சிதமாக குழிதோண்டி ராஜேசின் உடலை புதைக்க முடிந்துள்ளது. சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது போல சத்தமில்லாமல் ராஜேசின் உடலையும் புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல சுற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் இன்னொரு சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவன் தலைமறைவாக உள்ளான். சம்பவத்தன்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் அந்த சிறுவனும் இறந்துள்ளான். அவனை கொலையுண்ட ராஜேஷ் கத்தியால் குத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் மகன் கவின் குமார் (வயது12).
இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கவின்குமார் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கண்மாயில் குளிக்க சென்றான். அடுத்த ஒரு மணி நேரத்தில் கவின் குமாரின் உடல் குளத்தில் மிதப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து செல்லப்பாண்டி உத்தப்ப நாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
சிறுவன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் கவின்குமாருடன் குளிக்க சென்ற 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கவின்குமாரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.
மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கம்பம் வடக்குபட்டி 5-வது தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கவினேஷ் (வயது 10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை வீட்டை விட்டு விளையாட செல்வதாக கூறிச் சென்ற கவினேஷ் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாயமான மாணவனை தேடி வந்தனர்.
இன்று காலை காமையகவுண்டன் பட்டியில் டாஸ்மாக் கடை இருந்த பகுதியில் ஒரு சிறுவன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது கவினேஷ் என தெரிய வந்தது.
அவனது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயம் இருந்தது. மேலும் அவனது கால்சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சிறுவன் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப முன் விரோதம் காரணமாக சிறுவனை யாரேனும் கடத்தி கொன்றார்களா? அல்லது பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்